யாழ். மற்றும் காங்கேசந்துறையில் 133பேர் கைது

யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுகளில் இருந்து சிறுகுற்றம் புரிந்த 133பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்.பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம்.ஜெப்ரி தெரிவித்தார்.இதன்போது, கடந்த வாரத்தில் பிடியானை பிறப்பிக்கப்பட்ட 43 பேரும், அடிகாயம் ஏற்படுத்திய 33 பேரும், சந்தேகத்தின் பேரில் 19 பேரும், அனுமதிபத்திரமின்றி சாராயம் வைத்திருந்த 08 பேரும், மதுபோதையில் வாகனம் செலுத்திய 28 பேரும், சட்டவிரோத மணல் ஏற்றிய ஒருவர் உட்பட 133 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related Posts