யாழ். மருத்துவ பீடத்தின் 40ஆம் ஆண்டு நிறைவு

யாழ்ப்பாண மருத்துவ பீடத்தின் 40ஆம் ஆண்டு நிறைவினை ஒட்டி யாழ். மருத்துவ பீடமும் வட. மாகாண சுகாதார அமைச்சும் இணைந்து நடாத்துகின்ற மருத்துவ கண்காட்சி எதிர்வரும் 4, 5, 6, 7ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை யாழ். மருத்துவபீடத்தில் இடம்பெறவுள்ளது.

அடிப்படை விஞ்ஞானம், மருத்துவ துறையின் நவீன முன்னேற்றங்கள், நிகழ்கால சுகாதார சவால்கள், சுகாதார தொழில் வாய்ப்புக்கள், சிறுவர் ஆரோக்கியம், பருவ ஆரோக்கியம், வயது வந்தோர் சுகாதாரம் மற்றும் முதியோர் சுகாதாரம் ஆகிய முக்கிய எட்டு தொனிப் பொருட்களில் இடம்பெறவுள்ளது.

குறித்த கண்காட்சிக்கு அனைவரையும் அழைத்து நிற்கின்றது யாழ். மருத்துவ பீடம்.

Related Posts