யாழ். மத்திய கல்லூரி நீச்சல் தடாகத்தில் மூழ்கி மாணவன் பலி

யாழ். மத்திய கல்லூரி நீச்சல் தடாகத்தில் மாணவரொருவர் மூழ்கி நேற்று வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த வவுனியா தமிழ் மகாவித்தியாலய மாணவரான யோகேஸ்வரன் கிரிதரன் (வயது 15) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ். மத்திய கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்வுக்காக வந்திருந்த இம்மாணவன், எவருக்கும் தெரியாத நிலையில் யாழ். மத்திய கல்லூரி நீச்சல் தடாகத்ததில் நீந்தி விளையாடியபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக யாழ். பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் ஈ.எல்.பெரேரா இன்றைய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடா்பான விசாரணையை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனா்.

Related Posts