யாழ். மத்திய கல்லூரியில் வடமாகாண சபைத் தேர்தல் வாக்குகள் எண்ணப்படும்: யாழ்.அரச அதிபர்

Suntharam arumai_CIவடமாகாண சபைத் தேர்தலின் பின்னராக வாக்கு எண்ணும் நிலையமாக யாழ். மத்திய கல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.அரச அதிபர் அறிவித்துள்ளார்.

யாழ். செயலகத்தில் இன்று காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இவ் அறிவிப்பு விடுக்கப்பட்டது.

இம்முறை வாக்குகள் யாழ். செயலகத்தில் வைத்து எண்ணப்படமாட்டாது என்றும் இது குறித்து இடம் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் யாழ். மத்திய கல்லூரியில் வாக்குகள் எண்ணப்படும் என யாழ். தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் யாழ். அரச அதிபருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

யாழ்.மத்திய கல்லூரியில் அதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ் அரச அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts