யாழ்ப்பாண மக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையிலான உறவுகளில் விரிசலை ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் ருவன் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
பிரிவினைவாதத்தை நோக்காகக் கொண்ட தரப்பினர் இவ்வாறு பேதங்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். கடந்த 27ம் திகதி இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து பொலிஸார் இராணுவத்தினரின் உதவியை கோரியிருந்தனர்.
28ம் திகதி படையினரை கடமையில் ஈடுபடுத்த ஆயத்தமான போதிலும் அதற்கான தேவை ஏற்படவில்லை. யாழ்ப்பாண மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் கடந்த காலம் முதல் மிக நெருங்கிய பிணைப்பு காணப்படுகின்றது.
ரிவிரெச இராணுவ நடவடிக்கை முதல் யாழ்ப்பாண மக்களுக்கும் படையினருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.
இந்த உறவுகளில் விரிசலை ஏற்படுத்த சில பிரிவினைவாதிகள் முயற்சித்து வருகின்றனர். யாழ்ப்பாண மக்கள் இராணுவத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் தரப்பினர் தற்போது பல்கலைக்கழக மாணவர்களையும் தங்களது நோக்கத்திற்காக பயன்படுத்தி வருவதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.