யாழ் மகாஜனக் கல்லூரிக்கு இரண்டாமிடம்

உதைபந்தாட்ட சம்மேளனத்தால் பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட சமபோஷா கிண்ணத்திற்கான 15 வயது பெண்கள் பிரிவுக்கு உட்பட்ட தேசியமட்ட போட்டித்தொடரில் யாழ் மகாஜனக் கல்லூரி இரண்டாமிடத்திற்குத் தெரிவாகியுள்ளது.

makajana-football

சிலாபம் வென்னப்பு அல்பேர்ட் பீரிஸ் விளையாட்டு மைதானத்தில் போட்டித்தொடரின் இறுதிப்போட்டி நேற்று (07.11.2016) நடைபெற்றது.

குருநாகல் நிக்கம்பிட்டிய வித்தியாலயத்தை மகாஜனா கல்லூரி எதிர்கொண்டது இதில் 1:0 என்ற கோல் கணக்கில் நிக்கம்பிட்டிய வித்தியாலயம் வெற்றிபெற்று முதலாம் இடத்திற்கு தெரிவானது. யாழ் மகாஜனக் கல்லூரி இரண்டாமிடத்தை பெற்றது.

Related Posts