யாழ் போதனா வைத்தியசாலையின் புதிதாக திறக்கப்பட்ட மகப்பேற்று விடுதிக்கு 14 புதிய நவீன கட்டில்கள் சிவபூமி அறக்கட்டளையின் அனுசரணையுடன் வழங்கி வைக்கப்பட்டது.
சிவ பூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்கள் வைத்தியசாலைக்கு சென்று, மேற்படி கட்டில்களை 18 ஆம் இலக்க மகப்பேற்று விடுதியில் வைபவரீதியாக கையளித்தார்.
போதனா வைத்தியசாலைக்கு மேலும் புதிய கட்டில்கள் மூலம் பழைய கட்டில்களை மாற்றீடு செய்யப்பட வேண்டிய தேவை இருக்கின்றது.
சிவபூமி அறக்கட்டளையின் ஊடாக இவ்வாறு கட்டில்களை போதனா வைத்தியசாலைக்கு வழங்குவதன் மூலம் நோயாளர் சேவை மேலும் வளமடையும் என பணிப்பாளர் வைத்தியர் சத்தியமமூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார்.