பாம்புக் கடிக்கு இலக்காகிய ஒருவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவர் தன்னைத் தீண்டிய பாம்பை போத்தலில் அடைத்து வைத்தியசாலைக்கு எடுத்துவந்த சில நிமிடத்தில் அந்தப் பாம்பு போத்தலுக்குள் 10 குட்டிகளைப் போட்டதால் வைத்தியசாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
யாழ்ப்பாணம் காரைநகரில் நேற்று முன்தினம் ஒருவருக்குப் பாம்பு தீண்டியுள்ளது அவர் சிகிச்சைக்காக உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
சம்பவத்தில் காரைநகரைச் சேர்ந்த சுப்பிரமணியம் சிறிரங்கன் (வயது-36) என்பவரே பாம்புக் கடிக்கு இலக்காகினார்.
தீண்டிய பாம்பினை இனங்காணுவதற்காக அதனை போத்தலில் அடைத்து வைத்தியசாலைக்கு கொண்டு வந்துள்ளார்.
அந்தப் பாம்பு சிறிது நேரத்தில் 10 குட்டிகளைப் போட்டுள்ளதால் இந்தச் சம்பவத்தால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாம்புக் கடிக்கு இலக்கானவர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதேவேளை அந்தப் பாம்பு வைத்தியப் பரிசோதனையின் பின்னர் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது.