யாழ். போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்

Jaffna Teaching Hospitalயாழ்.போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

யாழ். போதனா வைத்தியசாலைக்கு மோட்டார் சைக்கிளில் நோயாளர் ஒருவரை அழைத்து வந்த நபரொருவர், நோயாளியை நோயாளர் பார்வையாளர் பகுதி வாயிலாக கொண்டுசெல்ல முற்பட்டபோது, குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர், இந்த வழியால் நோயாளரை அனுமதிக்க கொண்டு செல்ல முடியாதென்றும், வெளிநோயாளர் பிரிவு பகுதியூடாக கொண்டு செல்லுமாறும் கூறியுள்ளார்.

அந்நபர் மோட்டார் சைக்கிளை கொண்டு சென்ற பின்னர், அந்த பகுதிக்கு இரு மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் பொல்லால் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குலை மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த பாதுகாப்பு உத்தியோகதர்தர் தாக்குதல் மேற்கொண்டவர்களின் மோட்டார் சைக்கிளில் இலக்கத்தினை அடையாளப்படுத்தி யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான பாதுகாப்பு உத்தியோகத்தர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts