யாழ்.போதனா வைத்தியசாலை நிலைமை மோசமடைவதால் அச்சத்தில் வைத்தியர்கள்!!

யாழ்.போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை பொருட்களுக்கும், மருந்து பொருட்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு மோசமான நிலையில், காணப்படுவதாக வைத்திய நிபுணர் க.காண்டீபன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சையளிக்க முடியாது கடும் நெருக்கடியில் வைத்தியர்கள் கையறுநிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நோயாளிகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளமையினால் சிகிச்சைகளுக்கு தேவையான பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது.

இந்த நிலை தொடரும் பட்சத்தில் எதிர்காலத்தில் நோயாளிகளுக்கு தேவையான உணவினை கூட வழங்க முடியாத இக்கட்டான நிலை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Posts