யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர் தமக்கு பாதுக்காப்பு வழங்குமாறு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்

யாழ். போதனா வைத்தியசாலை தாதியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் தென்னிலங்கையைச் சேர்ந்த தாதியர்களின் ஆனைப்பந்தியில் அமைந்துள்ள விடுதிக்குள் இனந்தெரியாத நபர்கள் நுழைந்து தாக்கியதில் ஒருவர் கையில் காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

26வயதுடைய மினுவாங்கொட பகுதியினைச் சேர்ந்த பெண் தாதியான ஜி.ஏ.ஆர் பெனாண்டோ என்பவரே கையில் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்திய சாலை 16ம் இலக்க நோயாளர் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தமக்கு பாதுகாப்பான இடத்தில் விடுதியை ஏற்படுத்தித் தருமாறும் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்த சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்,

விடுதி வசதியின்றி தாதியர்கள் பரிதவிப்பு, உள்ளக விடுதி வசதி தாதியருக்கு எப்போது?,தாதியரின் பாதுகாப்பு கேள்விக்குறி, வைத்திய சாலை விடுதிக்குள் தாதியர் விடுதியை ஏற்படுத்தித் தா! போன்ற பாதாதைகளை தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இதேவேளை சம்பவ இடத்திற்கு வந்த வைத்தியசாலை பணிப்பாளர் தாதியர்களுக்கான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்ததுடன்.

தாக்குதலுக்குள்ளான தாதி உட்பட தென்னிலங்கையினை சேர்ந்த 18 தாதியர்களும் வைத்திய சாலை வளவில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் யாழ் போதனா வைத்திய சாலையில் உள்ள அனைத்து தாதியர்களும் தமது ஆதரவினை தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Posts