யாழ். போதனா வைத்தியசாலை; இதய சத்திரசிகிச்சை பிரிவுக்கு புதிய கட்டடம்

hospital1யாழ். போதனா வைத்தியசாலையில் இதய சத்திர சிகிச்சைப் பிரிவுக்கு என புதிய கட்டடம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது என்று வைத்தியசாலை பதில் பணிப்பாளர் மருத்துவர் எஸ். ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார்.

510 மில்லியன் ரூபா செலவில் நான்கு மாடிகளைக் கொண்டதாக இந்தக் கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
சுவிற்ஸர்லாந்து இலங்கை வர்த்தக சமூகத்தினரால் இதற்கான நிதி செலவிடப்படவுள்ளது.

தற்போது சமையலறை உள்ள கட்டடத் தொகுதி இடிக்கப்பட்டு அந்த இடத்திலேயே இதய சத்திரசிகிச்சைப் பிரிவுக்கான புதிய கட்டடத் தொகுதி நிர்மாணிக்கப்படவுள்ளது என்று பணிப்பாளர் ஸ்ரீபவானந்தராஜா மேலும் தெரிவித்தார்.

Related Posts