நான்கு மாதக் குழந்தை ஒன்றுக்கு மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்தை விட வேறு மாத்திரைகளை மருத்துவர் மாற்றிக் கொடுத்துள்ளார். எனினும் பெற்றோரின் கவனத்தால் குழந்தை உயிர் தப்பியுள்ளது.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடந்துள்ளது.
கிளினிக் சிகிச்சைக்குச் சென்ற 4 மாதக் குழந்தை ஒன்றுக்கு விற்றமின் மாத்திரைக்குப் பதிலாக குருதி அழுத்த நோய்க்கு உபயோகிக்கும் மாத்திரை வழங்கப்பட்டுள்ளது.
குழந்தைக்கு ஒரு நேர மாத்திரையைக் கொடுத்த பெற்றோர், குழந்தையில் மாற்றத்தை உணர்ந்தமையால் விழிப்படைந்து, அயலில் உள்ள தாதி மற்றும் மருத்துவரை நாடியுள்ளனர்.
மீண்டும் வைத்தியசாலைக்குச் சென்ற பெற்றோர் மருந்தாளர் மாத்திரைகளை மாற்றிக் கொடுத்ததை அறிந்தனர்.
பாதிக்கப்பட்ட பெற்றோரால் வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் எழுத்து மூலம் முறையிடப்பட்டுள்ளது.