யாழ் போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக 100 மில்லியன் ரூபா

யாழ் போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக இவ் வருடம் 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று சுகாதார மற்றும் சுதேச வைத்திய துறையின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித்த மகிபால கூறினார்.

palitha-mahi-pala

மேலும் வைத்திசாலைக்கான விசேட மருந்து உபகரண இயந்திரங்களை வழங்க எதிர்பார்த்துள்ளதுடன், அதி விசேட சிகிச்சைக்கான பிரிவுகள் மற்றும் விபத்துக்கான பிரிவுகளும் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

சுகாதார மற்றும் சுதேச வைத்தியதுறை அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்திய அதிகாரிகள் மற்றும் தாதியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கும் வகையில் நடமாடும் சேவை ஒன்று இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது..

இந்நிகழ்விற்கு சுகாதார மற்றும் சுதேச வைத்தியதுறை அபிவிருத்தி பிரதி அமைச்சர் பைசல் காசிம் மற்றும் சுகாதார மற்றும் சுதேச வைத்திய துறையின் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி பாலித்த மகிபால ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த போதே பணிப்பாளர் நாயகம் பாலித்த மகிபால இவ்வாறு தெரிவித்தார்.

Related Posts