யாழ்.போதனா வைத்தியசாலையை சர்வதேச தரத்திற்கு ஏற்ப மாற்ற நடவடிக்கை!

யாழ்.போதனா வைத்தியசாலையை சர்வதேச தரத்திற்கு ஏற்ப நவீன வசதிகளைக் கொண்ட முதற்தரமான sribavanantharaja_jaffna_hosமருத்துவமனையாக மாற்றுவதன் மூலம் வடபகுதி மக்களுக்கு அதிநவீன மருத்துவ சேவையை வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பிரதிப் பணிப்பாளர் சிறிபவானந்தராஜா தெதரிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற மருத்துவமனை அபிவிருத்தி சம்பந்தமாக கருத்து வெளியிடும் போது இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவ் வைத்தியசாலையின் ஊடாக சேவைகளை விரிவாக்கம் செய்யும் நோக்கில் ஜப்பான் அரசின் நிதியுதவியின் கீழ் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடியதாக புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறாக நவீன தொழில் நுட்ப வசதிகளைக் கொண்ட மைந்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இவ் வைத்தியசாலையின் ஊடாக பொதுமக்கள் தமக்கான சேவைகளை விரைவாகவும்,மனநிறைவாகவும் பெற்றுக் கொள்ள வேண்டும்.

மேலும் பல நவீன வசதிகள் இம் மருத்துவ மனைக்கு ஏற்படுத்தப்படவுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

பொது மக்களுக்கான சேவைகளை கருத்தில் கொண்டு இங்கு கடமைபுரியும் மருத்துவர்கள், தாதியர்கள் உள்ளிட்ட துறைசார்ந்த அனைவரும் கடமையுணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் சேவை மனப்பான்மையுடனும் பணிபுரிய வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

Related Posts