யாழ். போதனா வைத்தியசாலைக்கு நிதியுதவி

யாழ். போதனா வைத்தியசாலையில் புதிய மகப்பேற்று விடுதியை கட்டுவதற்கு 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் செ.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார்.

sribavanantharaja_jaffna_hos

யாழ். போதனா வைத்தியசாலையில் ஊடகவியலாளர்களை சந்தித்த போது, ஊடகவியலாளர்களினால் மகப்பேற்று விடுதி கட்டிடம் அமைப்பது தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வைத்தியசாலையில் இருக்கும் விடுதி மிகவும் பழைமை வாய்ந்ததனால், சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில், 2015 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் 300 மில்லியன் ரூபா நிதி சுகாதார அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு விடுதிக்கான ஆரம்ப கட்ட வேலைகளை ஆரம்பிக்கவுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

Related Posts