யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் விற்பனை மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் அறியத்தருமாறு யாழ். பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போதைப் பொருள் விற்பனை, சட்டவிரோத செயல்களை தடுக்கும் நோக்கிலும், இவ்வாறான செயற்பாடுகளை முற்றாக ஒழிப்பதற்கு உதவி வழங்குமாறு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்தோடு, குறித்த விடயங்கள் தொடர்பில் 076-6633750 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக யாழ். மாவட்டத்தில் சட்டவிரோத போதைப் பொருள் விற்பனை மற்றும் போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகின.
அத்தோடு, வீதிகளில் யுவதிகள் குடிபோதையில் அட்டகாசம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.