யாழ் பாசையூர் புனித அந்தோனியார் திருவிழா

யாழ் பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று(13) வெகு சிறப்பாக நடைபெற்றது.

anthoneyar-temple-pasaioor

கோடி அற்புதராம் பாசையூர் புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த முதலாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நவநாள் திருப்பலிகள் இடம்பெற்று நேற்று திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.

நேற்று(13) காலை 6.30 மணியளவில் யாழ் மறைமாட்ட ஆயர் ஜஸ்ரின் பேணாட் ஞானாப்பிரகாசம் தலைமையில் திருவிழா திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. இதில் பெரும் எண்ணிக்கையான பொதுமக்கள், அடியார்கள், துறவிகள், மற்றும் அரசியல் பிரமுகர்கள், எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related Posts