யாழ். பழைய பூங்கா வளாகத்தில் மைதானங்களை அமைப்பது தொடர்பில் ஆராய்வு

யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் கூடைப்பந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்ட மைதானங்களை நிர்மாணிப்பது தொடர்பில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் நேற்று நேரில் சென்று ஆராய்ந்தறிந்து கொண்டனர்.

 

volly3

இதன்போது யாழ். மாவட்ட கூடைப்பந்தாட்ட மற்றும் கரப்பந்தாட்ட சங்கங்கள் தமக்கு பொதுவான விளையாட்டு மைதானமொன்றை அமைத்து தருமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தன.

இதனடிப்படையில் பழைய பூங்காவில் ஏற்கெனவே நிர்மாணிக்கப்பட்டுள்ள சிறுவர் பகுதிக்கு பின்புறமாகவுள்ள வெற்றுக் காணியில் குறித்த இரு விளையாட்டுக்களுக்கான மைதானங்களை அமைப்பது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

 

volly1

அந்தவகையில், இனம்காணப்பட்ட பகுதியை யாழ். மாநகரசபையின் ஊடாக துப்புரவு செய்வதற்கு நடவடிக்கையினை முன்னெடுத்த அமைச்சர், அங்குள்ள மரங்களை வெட்டாமல் துப்புரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் துறைசார்ந்தோருக்கு பணிப்புரை விடுத்தார்.

இதன்போது யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம், மாவட்ட சிரேஷ்ட நில அளவை அத்தியட்சகர் சிவதாஸ் ஆகியோருடன் குறித்த இரண்டு விளையாட்டு சங்கங்களினது பிரதிநிதிகளும் உடனிருந்தனர்.

Related Posts