யாழ்.பல்கலை வவுனியா வளாக மாணவர்கள் 25 பேர் மொட்டையடிப்பு!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக மாணவர்கள் 25 பேர் முதுநிலை மாணவர்களின் பகிடிவதை கொடுமை காரணமாக மொட்டையடித்துக் கொண்டுள்ளனர்.

வவுனியா குருமண்காடு சந்தியில் அமைந்துள்ள சிகை ஒப்பனை நிலையம் ஒன்றிலேயே அவர்கள் 25 மாணவர்களும் மொட்டையடித்தனர்.

சிகை ஒப்பனை நிலையத்தின் உரிமையாளர் ஒரு மொட்டைக்கு 500 ரூபா கேட்ட நிலையில் மாணவர்கள் தங்களிடம் அவ்வளவு பணம் இல்லை மொட்டையடிக்காமல் பல்கலைக்கழகம் சென்றால் இளநிலை மாணவிகளின் முன்னால் அரை நிர்வாணமாக நிறுத்தி மூத்த மாணவர்கள் அடிப்பார்கள் என கூறியுள்ளனர்.

அதனால் சிகை ஒப்பனை நிலையத்தின் உரிமையாளர் மனிதாபிமான அடிப்படையில் 50 ரூபாவுக்கு மொட்டையடித்துள்ளார்.

Related Posts