யாழ் பல்கலை மோதல் வழக்கை வாபஸ் பெறும் மாணவர்கள்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையிலான மோதல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை மீளப் பெறவுள்ளதாக தமிழ் சிங்கள மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து எதிர்வரும் டிசெம்பர் மாதம் 8 ஆம் திகதிக்கு முன்னர் மாணவர்கள் இரு தரப்பினரையும் முறைப்பாடுகளை வாபஸ் பெறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட புதுமுக மாணவர்களின் வரவேற்பு நிகழ்வின் போது சிங்கள மாணவர்கள் கண்டிய நடனத்தை ஏற்பாடு செய்தமையினால் தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது.

இதன்போது காயமடைந்த சிங்கள மாணவன் ஒருவன் கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலை யத்தில் தமிழ், சிங்கள மாணவர்களால் எதிர் எதிராக முறைப்பாடுகளை பதிவு செய்யப்ப ட்டன.

இதனையடுத்து குறித்த வழக்கு விசாரனை இடம்பெற்று வரும் நிலையில் நேற்றய தினம் வழக்குகளை வாபஸ் பெறவுள்ளதாக தமிழ், சிங்கள மாணவர்கள் நீதிமன்றத்தில் அறிவித்த தாக சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

Related Posts