யாழ்.பல்கலை மே 22ஆம் திகதி ஆரம்பம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் வரும் 22ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தகுதி வாய்ந்த அதிகாரிக்கும் பீடாதிபதிகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறும் கலந்துரையாடலையடுத்து உத்தியோகபூர்வ பதிவாளர் அறிவிப்பார் என்று அறிய முடிகின்றது.

பல்கலைக்கழகத்தில் கல்விசார் நடவடிக்கைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பான அறிவித்தல் வெகுசன தொடர்பு சாதனங்கள் ஊடாக பதிவாளர் அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

பாதுகாப்புத் தரப்பினரின் சோதனைகளின் பின் பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பில் துணைவேந்தர்களை முடிவெடுக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தல் வழங்கிய நிலையில் நாட்டின் சில பல்கலைக்கழகங்கள் இந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டன. மேலும் சில பல்கலைக்கழகங்கள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளன.

Related Posts