யாழ் பல்கலை மாணவர் கொலை வழக்கு அனுராரபுரத்திற்கு மாற்றப்பட வேண்டும்

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை, உடனடியாக யாழ்ப்பாணத்தில் இருந்து அனுராதபுரத்திற்கு மாற்றப்பட வேண்டும் என மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்கட்சி வலியுறுத்தியுள்ளது.

கடமையை செய்த காரணத்தால் குற்றவாளிகள் ஆக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படும் அதேவேளை அவர்கள் சார்பில் தமிழில் வாதக் கூடிய சட்டத்தரணிகளும் அற்ற நிலை காணப்படுவதால் இந்த கோரிக்கையை விடுப்பதாக கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

Related Posts