யாழ். பல்கலை மாணவர் ஒன்றியத்தின் கண்டன அறிக்கை

கடந்த சில நாட்களாக யாழ். பல்கலைக்கழகத்தைச் சூழ இராணுவத்தினரும் புலனாய்வுத் துறையினரும் குவிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளதாக பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தொடர்ந்தும் விரிவுரைகள் நடைபெறும் என பீட நிர்வாகங்கள் அறிவித்துள்ள போதும், கடந்த சில நாட்களாக மாணவர்கள் விரிவுரைகளுக்கு சமூகமளிப்பது குறைவாகவே காணப்படுகின்றது.

அத்துடன் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களும், அச்சம் காரணமாக வௌியேறியுள்ளனர்.

மாணவர்கள் பெரும் கஸ்டங்களுக்கும் இன்னல்களுக்கும் மத்தியிலேயே தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடர்கின்றனர்.

இதனால் பெரும் மணஉளைச்சல்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட தரப்புக்கள் இதனைக் கருத்தில் கொண்டு எமது மாணவர்களின் சுமூகமான கற்றல் செயற்பாடுகளுக்கும் பல்கலைக்கழக சுமூகமான நடவடிக்கைகளுக்கும் ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள கண்டன அறிக்கை..

uni-studens-

Related Posts