யாழ். பல்கலை. மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இன்று 15ஆம் திகதி வியாழக்கிழமை தமது கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நேற்று முன்தினம் 13ஆம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தின் மூலம் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பட்டக் கல்வியை நிறைவு செய்த பல மாணவர்களுக்கு இதுவரை பட்டமளிப்பு நடாத்தப்படவில்லை. இதற்கு வேந்தர் நியமனம் செய்யப்படாமை காரணமாகச் சொல்லப்படுகிறது. எனவே உடனடியாக வேந்தர் நியமனத்தை விரைவாக நடாத்துவதன் மூலம் பட்டமளிப்பு விழாவை நடாத்த வேண்டும் என்றும், மூன்று மாத காலத்துக்கு மேலாக வெளியிடப்படாமலிருக்கும் பரீட்சை முடிவுகளை வெளியிட வேண்டும் என்றும் குறிப்பிட்டு இன்று வியாழக்கிழமை தமது கல்வி நடவடிக்கைகளைப் புறக்கணிக்கவுள்ளதாக அந்தக் கடிதத்தில் மாணவர் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related Posts