யாழ். பல்கலை மாணவர்கள் இருவரும் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவிற்கு!

கோப்பாய் பொலிஸாரால் நேற்றிரவு கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், இவர்கள் இருவரும் கொழும்புக்கு அழைத்துவரப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

ஸ்ரீடெலோ காரியாலத்தின் மீது பெற்றோல் குண்டு வீசியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழகத்தை சேரந்த இரண்டு மாணவர்களையும் குற்றப்புலனாய்வு பிரிவினர் கொழும்புக்கு அழைத்து வந்து கொண்டிருக்கின்றனர்.மேற்படி சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரும் நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தியதன் பின்னரே அவ்விருவரையும் கொழும்புக்கு அழைத்துவருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.திருநெல்வேலியில் அமைந்துள்ள ஸ்ரீடெலோ காரியாலயத்தின் மீது கடந்த புதன்கிழமை அதிகாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

Related Posts