யாழ்.பல்கலை மாணவர்களுக்கு இடையில் கைக்கலப்பு!

யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்களுக்கு இடையில் நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முகாமைத்துவ பீடத்திற்கு அண்மையில் உள்ள உணவகம் ஒன்றில் நான்காம் வருட மாணவர்களுக்கும் , முதலாம் வருட மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைக்கலப்பில் முடிவடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts