யாழ். பல்கலை மாணவன் விபத்தில் பலி ; மூவர் காயம்

மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள்கள் இரண்டு நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று காலை 10.30 மணியளவில் நாச்சிக்குடாவில் இடம்பெற்றது.

காயமடைந்த மூவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது யாழ். விஞ்ஞாப் பிரிவு இரண்டாம் வருட மாணவனான பிரான்சிஸ் ரோபட் கிளன்ஸ்டன் லியோன் ( வயது 27) என்பவரே உயிரிழந்தவராவார்.

இவருடன் பயணித்த வாரணன் (வயது 25) என்பவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர்களுடன் மோதுண்ட மோட்டார் சைக்கிளில் பயணித்த தெய்வேந்திரம் (வயது 51), பத்மகலா (வயது 42) ஆகியோர் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் முழங்காவில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts