யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கச்சேரி – நல்லூர் வீதியில் வீடொன்றில் தங்கியிருந்து கல்வி பயிலும் மாணவனுக்கே நேற்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மாத்தளையைச் சேர்ந்த குறித்த மாணவன், வீட்டுக்குச் சென்று உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்குக்கும் சென்று வந்துள்ளார்.
தப்புள்ளயிலிருந்து கடந்த 26ஆம் திகதி பேருந்தில் அவர் யாழ்ப்பாணத்துக்கு வந்ததாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த மாணவன் உணவு வாங்கச் சென்ற ஆனைப்பந்தி உணவகம் சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டு அங்கு பணியாற்றுபவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.