யாழ். பல்கலை மருத்துவ பீட மூன்றாம் வருட மாணவன் சடலமாகக் கண்டெடுப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மூன்றாம் வருட மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறையைச் சேர்ந்த இளங்குன்றன் என்ற குறித்த மாணவன் கோப்பாய், வன்னியசிங்கம் வீதியில் வாடகை வீடொன்றில் தங்கி தனது பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகளைத் தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், மாணவன் இன்று வகுப்புகளுக்கு சமூகமளிக்காததால் அவருடைய நண்பர்கள் தொலைபேசியில் அழைப்பினை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்ச்சியாக அழைப்புக்களை மேற்கொண்டபோதும் அவர் பதிலளிக்காததால் சந்தேகமடைந்த நண்பர்கள் மாணவன் தங்கியிருந்த இடத்திற்குச் சென்றுள்ளனர்.

அங்கு அவர் தங்கியிருந்த அறை பூட்டியவாறு காணப்படவே, அவருடைய நண்பர்கள் கதவை உடைத்து உட்சென்று பார்த்தபோது குறித்த மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இதுதொடர்பாக பொலிஸாருக்கு தகவல் அறிவிக்கப்பட்டதுடன் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts