யாழ். பல்கலை மருத்துவபீட மாணவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது. வவுனியாவை சேர்ந்த குறித்த மாணவன் யாழ். பலாலி வீதி, கந்தர்மடம் சந்தி பகுதியிலுள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்தார்.

இந்நிலையில், குறித்த வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில், மாணவனின் உடலை கண்டெடுக்கப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts