யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற அசம்பாவிதம்,மாணவர்கைது என்பவற்றைத் தொடர்ந்து பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சிலர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் தனித்தனியே 3 மணிநேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 27ஆம்,28ஆம் திகதிகளில் பல்கலைக்கழக பிரதான வாயில்,விஞ்ஞான பீடவாயில்,ஆண்கள் பெண்கள் விடுதி ஆகியவற்றில் கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களே இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
விசாரணைக்கென பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தி்யோகத்தர் பணிமனையில் குற்றத்தடுப்பு பிரிவினரால் விவரம் கோரப்பட்டடது.
எனினும் பல்கலைக்கழக நிர்வாகமே அதற்கு பொறுப்பு எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் பல்கலை நிர்வாகத்தின் அனுமதியுடன் கடந்த சனி,ஞாயிறு தினங்களில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரியவருகிறது.