யாழ். பல்கலை. நிர்வாகம் தொடர்பில் வெளியாகும் செய்திகள் குறித்து முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட ஒன்றியம் கவலை!

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பில் துணைவேந்தர் பீடாதிபதிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் குறித்து மேற்கொண்டு வருகின்ற விசமத்தனமான பிரசாரங்களை நம்பி செய்திகளை வெளியிட வேண்டாம் எனவும் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திய பின்னர் பிரசுரிக்குமாறும் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இது சம்பந்தமாக அவர்கள் வெளியிட்டுள்ள உத்தியோக பூர்வ அறிக்கை வருமாறு:

கடந்த நவம்பர் மாதம் 27ம் திகதி பல்கலைக்கழக சூழலிலும், மாணவர் விடுதிகளிலும் இலங்கை இராணுவ மற்றும் காவல்துறையினர் மேற்கொண்ட அத்துமீறல்களைக் கண்டித்து மறுநாள் மாணவர்கள் மேற்கொண்ட அமைதிவழிப் பேரணி மீது இராணுவ மற்றும் காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதல்களைத் தொடர்ந்து அன்றைய தினமே 3 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டமை மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் உட்பட ஏனைய மாணவர்களின் கைது  மற்றும் அவர்களின் விடுதலை தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகள் தொடர்பாக ஒரு சில் ஊடகங்கள் பல்கலைக்கழக துணைவேந்தர், பீடாதிபதிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகளை இலக்கு வைத்து மேற்கொண்டு வருகின்ற விசமத்தனமான செய்தி பிரசாரங்கள் பல்கலைக்கிழக மாணவர்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

எமது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் விஞ்ஞானபீட மாணவர் ஒன்றிய உறுப்பினர் விசாரணைக்காக அழைக்கப்பட்டு தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றமையால் எமது கல்விச் செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களின் விடுதலைக்காக பல்கலைக்கழக நிர்வாகம் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது என்பது தொடர்பான பூரண விளக்கம் அற்ற சூழ்நிலையில் சில ஊடகங்கள் தமக்குக் கிடைக்கின்ற சில் தகவல்களைக் கொண்டு அதனைத் திரிபுபடுத்தி சில பொய்யான, ஒன்றிற்கொன்று முரணான தகவல்களை வெளியிட்டு வருவதுடன்,

mscu mscu2

Related Posts