யாழ். பல்கலை கிளிநொச்சி பீடங்கள் விரைவில் தனி வளாகமாக மாற்றப்படும்

யாழ். பல்கலைகழகத்தின் கிளிநொச்சி பீடங்களான பொறியியல், விவசாய பீடங்கள் தனியான வளாகமாக மாற்றப்படும் என கல்வி உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

uni-vanni-kilinochchi-1

யாழ். பல்கலைகழகத்தின் கிளிநொச்சி பொறியில் மற்றும் விவசாய பீடங்களின் ஆரம்ப சமய நிகழ்வுகள் இன்று கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள விவசாய பீட வளாகத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

uni-vanni-kilinochchi-2

இன்று காலை 08 மணிக்கு கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள விவசாய மற்றும் பெறியியல் பீட வளாகத்திற்கு வருகைதந்த உயர் கல்வி அமைச்சர் மற்றும் பாரம்பரிய சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற பிரதிகுழுக்களின் தலைவர் முருகேசு சந்திரகுமார், பல்கலைக்கழக துணை வேந்தர் வசந்தி அரசரட்ணம் ஆகியோர் அங்குரார்பண சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ். பல்கலைகழத்தில் பொறியியல் பீடம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பது வடக்கு வாழ் மக்களின் நீண்ட நாள் கனவு. இதற்கமைவாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து தரப்பு முயற்சிகளின் பயனாக யாழ். பல்கலைகழத்திற்கான பொறியியல் பீடம் ஆரம்பிப்பதற்கான அனுமதி கிடைத்தது.

இதனையடுத்து கிளிநொச்சி அறிவியல் நகரில் இந்த பீடத்தை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு அதற்கான பணிகளும் முன்னெடுக்கப்பட்டு இவ்வருடம் முதலாவது வருட மாணவர்கள் பொறியியல் பீடத்திற்கு உள்வாங்கப்படவுள்ளனர்.

அத்தோடு யுத்தத்திற்கு முன்னர் கிளிநொச்சி இயங்கிய விவசாய பீடமும் மீண்டும் கிளிநொச்சி அறிவியல் நகரில் ஆரம்பிக்கப்படுகிறது. 24 வருடங்களின் பின்னர் யாழ் பல்கலைகழகத்தின் விவசாய பீடம் நிரந்தர கட்டிடம் ஒன்றில் இயங்க ஆரம்பித்திருக்கின்றமையும் குறிப்பிட்டத்தக்கது.

யாழ் பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகத்திற்கு 560 ஏக்கர் காணி அறிவியல் நகரில் ஒதுக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Posts