யாழ்.பல்கலை காவலாளிகள் இருவர் கைது!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவதற்கு மாணவர்களுக்கு அனுமதி வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் யாழ்.பல்கலை காவலாளிகள் இருவர், கோப்பாய் பொலிஸாரினால் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் முன்பாக, மாணவர்களினால் சுடர் ஏற்றப்பட்டு, இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நிகழ்வு தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக கடமையிலிருந்த யாழ்.பல்கலை காவலாளிகள் இருவரை கைது செய்த பொலிஸார், கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த இருவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts