யாழ். பல்கலை கல்வி நடவடிக்கைகள் 16முதல் ஆரம்பம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகளை எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிக்குமாறு பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு முகாமில் வைக்கப்பட்டுள்ள நான்கு மாணவர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்கவே எதிர்வரும் 16ஆம் திகதி முதல் மேற்படி கல்விச் செயற்பாடுகளை மீளவும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறவுள்ள விரிவுரையாளர்கள், துணைவேந்தர் மற்றும் மாணவர் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பின் போது இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுக்கப்படவுள்ளது.

பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் விடுதலை தொடர்பாக நம்பிக்கையான முடிவு, துணைவேந்தருக்கும், விரிவுரையாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts