யாழ். பல்கலையில் 2151 பேருக்குப் பட்டம்!

யாழ்பாண பல்கலைக்கழகத்தின் இவ்வருட பட்டமளிப்பு விழாவில் 2151 மாணவர்கள் பட்டம் பெறவுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.

நேற்றய தினம் முற்பகல் 9.00 மணியளவில் யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயெ மேற்கண்டவாறு தெரிவித்தார்

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா எதிர்வரும் ஐனவரி 10, 11ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. பத்தாம் திகதி ஐந்து அமர்வுகளாகவும் பதினோராம் திகதி நான்கு அமர்வுகளாகவும் நடைபெறவுள்ளது.

இவ் பட்டமளிப்பு விழாவில் 2151 மாணவர்கள் பட்டம் பெற இருக்கிறார்கள். இவர்களில் 164 பேர் பின் பட்டப்படிப்பு சான்றிதழை பெறவுள்ளனர். 1471உள்வாரி மாணவர்களும் 484 வெளிவாரி மானவர்களும் பட்டம்பெறவுள்ளனர். மேலும் 32 மாணவர்களுக்கு டிப்ளோமா பட்டங்களும் வழங்கப்படவுள்ளது.

இந்த பட்டமளிப்பு விழாவில் முதலாவது அமர்வு காலை 9 மணிக்கும், இரண்டாவது அமர்வு 10.30கும் மூன்றாவது அமர்வு 11.30 கும் நான்காவது அமர்வு 2.00 மணிக்கும் ஐந்தாவது அமர்வு 3.30கும் நடைபெறவுள்ளது.

இரண்டாம் நாள் அமர்வுகள் காலை 9.00, 10.30, 1.30, 3மணிக்கும் நடைபெறவுள்ளன. பட்டமளிப்பு பற்றிய விவரங்கள் பல்கலைக்கழக இனையத்தளத்தில் விரிவாக போடப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.

Related Posts