யாழ்.பல்கலையில் பகிடிவதையால் இரு மாணவர்கள் வைத்தியசாலையில்

யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதையால் கடுமையாக பாதிக்கப்பட்ட இரண்டு மாணவர்கள் நேற்று முன்தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாதரவத்தை மற்றும் கொடிகாமத்தை சேர்ந்த கலைப்பீட இரண்டாம் வருட மாணவர்கள் இருவரே மேற்படி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24ஆம்திகதி குறித்த மாணவர்கள் உள்ளிட்ட 8 மாணவர்களை ஏனைய மாணவர்கள் சிலர் பகிடிவதைக்கு உட்படுத்தி கடுமையான முறையில் தாக்கியுள்ளனர்.

இதில் காயமடைந்த மாணவர்கள் இருவரின் நிலை மோசமடைந்த காரணத்தால் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளனர்.

அப்போது இருவரில் ஒருவருடைய செவிப்பறை வெடித்துள்ளதாகவும் மற்றைய மாணவருக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ள காரணத்தாலும் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Posts