யாழ். பல்கலையில் தியாகி லெப்.கேணல் திலீபனின் நினைவுநாள்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தியாகி லெப்.கேணல்.திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவுநாள் நேற்று(15) ஆரம்பித்து எதிர்வரும் 26ஆம் நாள் வரை பல்கலைக்கழக மாணவர்களால் நினைவுகூர்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 15ஆம் நாளிலிருந்து 26ஆம் நாள் வரையிலான 12 நாட்களும் நீராகாரம் எதுவுமின்றி தன்னை ஆகுதியாக்கிய தியாகி லெப்.கேணல் திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று முதல் பல இடங்களில் நினைவுகூரப்படுகின்றது.

இந்நிலையிலேயே யாழ்ப்பாண பல்கலைக்கழ மாணவர்களினால் நேற்று தொடக்கம் தொடர்ச்சியாக 12 நாட்களுக்கு நினைவு கூரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தியாகி லெப்.கேணல் திலீபன் உண்ணாநோன்பிருந்த இடமான நல்லூரில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபி நேற்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயகப் போராளிகளினால் துப்புரவாக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts