யாழ். பல்கலையில் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 69ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள் தமிழர் தாயகம் எங்கும் கொண்டாடப்பட்டது.

அந்தவகையில் நேற்றையதினம் (26.11.2023) யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களின் ஆதரவுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்ததின நிகழ்வுகள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றுகூடிய மாணவர்கள், அலங்கரிக்கப்பட்ட இடத்தில் பிரபாகரனின் உருவப்படத்தினை வைத்து கேக் வெட்டியதுடன் இனிப்புக்களை பரிமாறி கொண்டாடியுள்ளனர்.

மேலும்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை மாணவர்களினால் கார்த்திகை தீபத்திருநாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களினால் பல்கலைக்கழக வளாகத்தை சூழ தீபச்சுடர்கள் ஏற்றப்பட்டதோடு பரமேஸ்வரா சிவன் ஆலயம் முன்றலிலும் தீபச்சுடர்கள் ஏற்றப்பட்டது.

Related Posts