யாழ் பல்கலையில் தமிழ், சிங்கள மாணவர்களுக்கிடையே நல்லதோர் ஐக்கியம் காணப்படுகிறது!!

தமிழ், சிங்கள மாணவர்களுக்கிடையே நல்லதோர் ஐக்கியம் காணப்படுவதாகத் தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவர் கிருஷ்ணமீனன், எமக்கிடையே எந்தவொரு பிரச்சினையும் இல்லையெனவும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட இறுதி வருட சிங்கள மாணவர்களுக்கு இடையே, நேற்று முன்தினம் (24) மாலை ஏற்பட்ட கைகலப்பு குறித்து, ஊடகங்களுக்கக் கருத்தத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

ஞாயிற்றுக்கிழமை எமது பல்கலைக்கழ மைதானத்தில், முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த 4ஆம் வருட பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறு காணரமாக, கத்திக்குத்தில் முடிவடைந்ததாகத் தெரிவித்தார்.

அந்த மாணவக் குழுக்களுக்கிடையே காணப்பட்ட நீண்ட கால முரண்பாடு, மனக்கசப்பு காரணமாகவே, இந்த மோதல் சம்பவம் ஏற்பட்டதெனவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், கலைப்பீடத்தைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள், இந்த மோதல் சம்பவத்தைத் தடுத்து நிறுத்தி, நிலைமையை சுமூகத்துக்குக் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.

Related Posts