யாழ். பல்கலையில் செஞ்சோலை மாணவிகள் படுகொலை நினைவேந்தல்!!

செஞ்சோலை மாணவிகள் படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ்.பல்கலைகழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.
பல்கலைகழக கல்விசார் , சாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

2006ஆம் ஆண்டு காலை 6 மணி இலங்கை அரச வான்படையின் இரண்டு கிபிர் விமானங்கள் செஞ்சோலை சிறுவர் இல்ல மாணவிகளை இலக்கு வைத்து குண்டுத்தாக்குதலை நடத்தியது.

61 மாணவிகள் கொல்லப்பட்டதுடன், 100 இற்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்திருந்தனர். அன்று இந்த சம்பவம் தமிழர் தாயகம் – புலம்பெயர் தேசம் எங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

Related Posts