யாழ். பல்கலையில் ஊழியர்கள் கௌரவிப்பு

jaffna-uniயாழ். பல்கலைக்கழகத்தில் சேவையாற்றி ஓய்வு பெற்ற அங்கத்தவர்ககள் மற்றும் 25வருட சேவையை நிறைவு செய்த ஊழியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் 2 மணியளவில் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் கலந்து கொண்டு ஒய்வு பெற்ற அங்கத்தவர்களுக்கும்,வெள்ளிவிழா காணும் ஊழியர்களுக்கும் விருதுகளை வழங்கிக் கௌரவித்தார்.

இதன்போது யாழ். பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் ஊழியர்களின், புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த 16 பிள்ளைகளும் கௌரவிக்கப்பட்டனர்.

Related Posts