யாழ் பல்கலையில் இடைநிறுத்தப்பட்ட கலைப்பீட பரீட்சைகள் 25ம் திகதி ஆரம்பம்!

யாழ் பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்ட கலைப் பீட பரீட்சைகள் 25ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதுடன் கல்விச் செயற்பாடுகள் இடை நிறுத்தப்பட்டுள்ள அனைத்துப் பீடங்களும் விரைவாக ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.

வரும் திங்கட்கிழமை கலைப்பீடம், முகாமைத்துவ வணிக பீடம் உள்ளிட்ட சில பீடங்களில் கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்க முடியுமா என நேற்று பீடாதிபதிகளுடன் ஆராயப்பட்டதாகவும் இதற்கு மேலும் சில நாட்கள் பொறுத்திருந்து சுமூக நிலையொன்று ஏற்படுத்தப்பட்ட பின்னர் இப் பீடங்களின் கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்கலாம் என பீடாதிபதிகள் தெரிவித்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்ட மருத்துவ, விஞ்ஞான, பொறியியல் பீடங்கள் மற்றும் ஏனைய சில துறைகளின் கல்விச் செயற்பாடுகள் சுமுகமாக இடம்பெற்று வருவதாகவும். மாணவர்களின் வருகையும் சிறப்பானதாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts