யாழ்.பல்கலையில் அமைச்சர் சுவாமிநாதன்! மாணவர் நிர்வாகத்தை முடக்கினர்!

யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இன்றைய தினம் முன்னெடுத்துவரும் போராட்டத்தினை அடுத்து பல்கலை நிர்வாகத்தி னருடனும் மாணவ பிரதிநிதிகளுடனும் பேச்சு நடத்துவதற்காக அமைச்சர் சுவாமிநாதன் தற்போது யாழ் பல்கலைக்கழகத்திற்கு வருகைதந்துள்ளார்.

uni-suwamy-nathan-2

இதேவேளை அமைச்சர் சுவாமிநாதனுடனான சந்திப்பு குறித்து செய்தி சேகரிப்பதற்காக பல்கலைக்கழகத்திற்கு உள்ளே ஊடகவியலாளர்கள் சென்ற சமயம் அவர்களை மாணவர்கள் உள்ளே செல்வதற்கு அனுமதி வழங்க மறுத்தனர் பின்னர் சமரசத்தின் பின் உள்ளே அனுமதிக்கப்பட்டபோதிலும் ஒரு சில ஊடகங்களை தவிர மற்றய ஊடகங்களின் ஊடகவியலாளர்கள் மீள உட்செல்ல மறுத்தனர்.

இதேவேளை யாழ் பல்கலைக்கழக நிர்வாக செயற்பாடுகள் மாணவர்களால்முடக்கப்பட்டுள்ளமையினால் எவரையும் பல்கலைக்கழகத்திற்குள் அனுமதிக்க மாணவர்கள் மறுத்து வருகின்றனர்.துணைவேந்தர் மாணவர்களுடன் வாக்குவாதப்பட்டு இறுதியில் சமரசத்தின் பின் துணைவேந்தர் பீடாதிபதிகள் மற்றும் சில மாணவர் ஆலோசகர்களை மட்டும் உள்செல்ல அனுமதித்தனர். இதன்போது துணைவேந்தரினை படம் பிடித்த ஊடகவியலாளர் ஒருவரை துணைவேந்தர் எச்சரித்ததாகவும் தெரியவருகின்றது.

uni-vasanthy-1

 

Related Posts