யாழ். பல்கலையில் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் கரும்புலிகள் தினம் கடைபிடிப்பு!

கடும் இராணுவப் பிரசன்னம், புலனாய்வாளர்களின் கண்காணிப்பு ஆகியவற்றுக்கு மத்தியிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் தினம் உணர்வு பூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது.

நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தினுள், பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடம் ஒன்றில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

கரும்புலிகள் தினமான நேற்றுக் காலை முதல் குடாநாட்டின் பல பகுதிகளிலும் இராணுவம், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் சுற்றிவளைப்பு – ரோந்து நடவடிக்கைகளுடன் ஈடுபட்டிருந்தனர்.

கரும்புலிகள் தினம் கொண்டாடப்படலாம் என்று கருதப்படும் இடங்களில் கடுங்காவலில் ஈடுபட்டதுடன் சிவில் உடையிலும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். எனினும் அச்சுறுத்தல்களை மீறி பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் தினம் கொண்டாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts