யாழ். பல்கலையின் நிர்வாக நடவடிக்கை ஆரம்பமாகிறது: தொற்று நீக்கல் நடவடிக்கை முன்னெடுப்பு

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் நிர்வாக நடவடிக்கைகளை எதிர்வரும் 29ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பல்கலைக்கழக நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு அமைய பல்கலைக்கழக பிரதான வளாகம் இன்று (வெள்ளிக்கிழமை) இராணுவத்தினரால் தொற்று நீக்கலுக்கு உட்படுத்தப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், தற்போது பல்கலைக்கழகங்களில் நிர்வாக நடவடிக்கைகளை மாத்திரம் முன்னெடுக்க அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கல்விசாரா ஊழியர்களின் செயற்பாடுகள் உட்பட்ட நிர்வாக செயற்பாடுகளை வரும் 29 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts