யாழ். பல்கலைக் கழக ஊழியர்கள் கொடும்பாவி எரித்துப் போராட்டம்

யாழ். பல்கலைக் கழக ஊழியர்கள் நேற்று திங்கட்கிழமை பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலில் கொடும்பாவி எரித்துப் போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.

யாழ். பல்கலைக்கழக ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்ற நிலையில், பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பிரிவினர் போராட்டத்துக்கு குழப்பம் விளைவித்தமையினால் கொடும்பாவி எரித்தனர்.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதவிடத்து பல்வேறு வடிவங்களில் தமது போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக ஊழியர்சங்கம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதிலும் பல்கலைக்கழக ஊழியர்கள் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts