யாழ். பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானப் பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

யாழ். பல்கலைகழகத்தில் விடுமுறை வழங்கப்பட்ட விஞ்ஞானப் பீட மாணவர்களின் கல்வி நடவடிக்கை இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கடந்த 10 ஆம் திகதி இரு மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலினை அடுத்து மாணவர்களுக்கு காலவரையரையற்ற விடுமுறை வழங்கப்பட்டது.

இதேவேளை குறித்த மோதலில் காயமடைந்த மாணவர்கள் தற்போது வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் அவர்கள் நலமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சில பீடங்களின் கல்விநடவடிக்கைகள் கடந்த வாரங்களில் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது. எனினும் மோதலுடன் தொடர்புடைய விஞ்ஞான பீடம் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

Related Posts