யாழ் பல்கலைக்கழக வெற்றிடங்களை நிரப்புதலில் முறைகேடு! பாதிக்கப்பட்டடோருக்குகான கலந்துரையாடலுக்கு அழைப்பு!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் கல்விசாரா ஊழியர்களின் வெவ்வேறு பதவிநிலை வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு உயர்கல்வி அமைச்சிலிருந்து பெயர்ப் பட்டியல்கள் அனுப்பப்பட்டுள்ளது.

அப்பட்டியலில் வேலை வாய்ப்பிற்காக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசுடன் உயர்கல்வி அமைச்சில் பெயர்களை பதிவு செய்த 325 வரையானோர் பாதிக்ப்பட்டுள்ளனர். இ

துகுறித்து பலஇடங்களில் முறையிட்டும் எவ்விதபலனும் கிடைக்கவில்லை. எனவே இதற்கு தீர்வினை காணவும் மேற்கொண்டு நடவடிக்கைகளை ஆராயவும் ஒன்றுசேர்ந்து செயற்படவும் சட்ட நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் ஆராயவும் இன்று 22.06.2019 மாலை 02 மணிக்கு யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்க பணிமனையில் பாதிக்கப்பட்டோர் ஒன்று கூடவுள்ளனர்.

பங்குபற்றும் பாதிக்கப்பட்டோர் உரிய ஆவணங்களுடன் வருகை தரவும். இதற்கான ஏற்பாடுகளை யாழ் மாவட்ட பொது அமைப்புகள் முன்னெடுத்துள்ளன.

Related Posts